Monday 19 August 2013

நிவ்யாவுக்கு வாழ்த்து...

நிவ்யா மேரி,
நிறையுள்ள குழந்தை நீ
பொறுமையுள்ள தங்கை நீ
திறமையுள்ள பிள்ளை நீ
சிறுமையில்லா சிறுமி நீ.

இயேசு போல்
ஞானத்திலும் வயதிலும்
வளர்க வளர்பிறையென...
அப்பா-இரச வடிவில் வருகின்றார்
தருகின்றார் தம்மை விருந்தாக...

முதல்முறை அவரை ஏற்கின்றாய்
முழுதும் அவராய் மாறிடவே
அவர்போல் என்றும் நன்மைகள் செய்து
அவர் அரசை நிலைநாட்டு...

'அவர் அரசு வருக'வென்றால்
அனுதின உணவு அனைவர்க்கும்
அமைதியும் சேர்ந்தே அமைந்திடுமே.
'அனுதின உண'வில் அடிப்படை தேவை
அனைத்தும் அடங்கும் நிச்சயமே.

'பணிவிடை' பெறுவதர்க்கன்று
'பணிவிடை' செய்யவே வந்தவர்
சீடர் பணிவிடை பெற்று பயனற்று
போவது பாரில் சுலபம்.

'தலை சாய்க்க இடமில்லாதவர்'
பசியின் கொடுமை உணர்ந்தவர்
பிறரை காத்து தம்மை காக்க தவறியவர்
சீடர் பிறரை சுரண்டி வாழ்கின்றார்!

மாற்றுக போலி சீடர்களை,
அவரது போலி அமைப்புகளை
விதையாய் வீழ்ந்து மடிவோம்
நூறு மடங்கு பலன் தருவோம்.

இறையரசு வருக
இறையாட்சி மலர்க
நீதி தரும் சமாதானம்
நிலவுக நிதவும்
வறுமை ஒழிக
வளம் பெருக
நிறைவாழ்வு நிலைக்க...





சும்மா எழுத்து...!

'நான்' என நினைப்பது தவறா?
தவறென சொல்வது நீயே!
நான் ஏன் கவனிக்கவேண்டும்
கவலைப்படவேண்டும்?

நினைப்பதும், சொல்வதும்
செய்வதுமெல்லாம் நான்தானே!
உனக்கேன் கவலை?
பாதிப்பு ஏதுமிருந்தால்
பொறுப்பேற்கிறேன்,
அவசியமென்றால்
பரிகாரம் செய்கிறேன்...

சும்மா இருப்பது சுகமில்லை
சுறுசுறுப்பின்றி சோர்ந்துபோவோம்
செயலிழந்தால் செத்ததற்கு நிகர்
செய்வோம் நன்மை செய்வோம்
நமக்கும் பிறர்க்கும் நாளும்.