
தாய், 
ஏன் இவ்வளவு வித்யாசமாகிறாள்?
ஏன் இவ்வளவு மதிக்கப்படுகிறாள்?
தந்தைக்கில்லாத இந்த பெருமை
ஏன் இந்த தாய்க்குமட்டும்?
கருவறையைப் பெற்று - அவள் 
கருவை தாங்குவதால்...
அந்த கருவை சுமந்து - தன்
நலம் மறந்து அதை காப்பதால்...
தன்னையே உணவாக்கி, உடல் தந்து 
உணர்வுகளை உளமாக்கி மனம் தந்து 
கனவுகளை கலையாக்கி கண் தந்து 
சுரம் ரசிக்க இசை தந்து செவி தந்து 
சுவை நுகர நா தந்து 
மொழி பேச வாய் தந்து 
அற்புத படைப்பாக்கி 
அவனிக்கு தந்தாளே -யாதலால் 
தாய் மட்டும் தனித்து நிற்ப்பாள் 
தரணியிலே சிறந்து நிற்ப்பாள்...
அன்னைக்கு ஈடாக அன்னையே
ஆண்டவனும் இல்லையே நிகராக 
இனியொரு பிறவி என்றால் 
ஈன்றெடுக்கும் தாயாக 
உலாவர வேண்டுமே 
ஊரெல்லாம் போற்றவேண்டுமே!
தாயை சேய் அறியும் 
தந்தையையோ..
தந்தையின்றி தாயில்லை 
தாயின்றி சேயில்லை
சேயில்லேல் மனிதனில்லை...
 
 

No comments:
Post a Comment