உடலுக்கு உணவு...
உணர்ச்சிக்கு உறவு...
உள்ளத்துக்கு உண்மை!
உண்மை எது, என்ன?
இதே கேள்வியை
கேட்டான் பிலாத்து!
உண்மை ஊமையானது!
உண்மையிடமே
உண்மை என்னவென்றால்
என்னென்பது?
ஊமையாவதை தவிர!
உள்ள நிலை உண்மை!
கடவுள் எந்த நிலை?
'அவர்' யார், எது, என்ன?
'கண்டவர் யாரும்
சொன்னதில்லையாம்!
சொன்னவர் யாரும்
கண்டதுமில்லையாம்!
மனிதனை படைத்தானாம்
ஆறாவது நாள் மண்ணால்
விவிலியத்தில்,
ஏழாவது நாளே கடவுளையே
படைத்துவிட்டான் கல்லால் மனிதன்!
இப்படி சொன்னான்
மலையாளத்து குஞ்ஞுண்ணி!
இன்னும் சொன்னான் வயலார்:
மனிதன் படைத்தான் மதங்களை
மதங்கள் படைத்தன தெய்வங்களை
மனிதனும் மதங்களும்
தெய்வங்களும் சேர்ந்து
மண்ணை பங்குபோட்டன
மனங்களையும்!
(தொடரும்...)
Monday, 20 September 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment