எனவேதான் இயேசு மனிதம் மதிக்கப்படாதபோது கொதித்தெழுந்தார், அவர்களுக்கு ஆறுதலும் அரவணைப்புமாக இருந்தார். அதன் வெளிப்பாடே அவர் பாவிகளோடும், விலை மாதரோடும், வரி தண்டுவோரோடும், நோயாளிகளோடும், புறவினத்தார் போன்றோரோடும் கலந்து உறவாடினார். தன்னையும் அவர்களோடு இணைத்துக்கொண்டார் என்றுகூட சொல்லலாம். இதுவே நோய்க்கு ஆரோக்கியமாக, பசிக்கு உணவாக, தீண்டாமை போன்ற கொடுஞ்செயல்களுக்கு நட்பாக, அனைத்திற்கும் மேலாக பாவத்துக்கு மன்னிப்பாக இருந்து வந்தார். காணாமல் போனவற்றை தேடி சென்றார். திரும்பி வந்தவரை எந்த குறையும் இல்லாமல் ஏற்றுகொண்டார், விபசாரத்தில் பிடிக்கப்பட்டவர்களை கூட ஏற்றுக்கொண்டார். தன்னை மறுதலித்தவர்களை மனதார மன்னித்தார், காட்டிகொடுத்தவர்களையும் 'நண்பா' என்றழைத்தார்.
தலை சாய்க்க இடமில்லாமல் பிறர் நட்பில் வாழ்ந்தார், பசியின் கொடுமையை அறிந்திருந்ததால் பசித்தவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார், உணவை பழுக செய்தார். ஏன், தன்னையே அப்பமாக, இரசமாக அளித்தார். குருவும் ஆண்டவருமான அவரே சீடர்களின் கால் கழுவினார், 'பணி ஏற்கவல்ல, பணி புரியவே வந்தேன்' என சொல்லி பணிவுக்கு மாதிரியானார். ஏற்ற தாழ்வுகளை எதிர்த்தார். சம உரிமையை, சகோதரத்துவத்தை கொண்டாடினார். கடவுளை தந்தை என அழைக்க கற்று தந்தார்.
இங்ஙனம், மனிதத்தை மகிமைப்படுத்தினார், அதை தெய்வீகமாக உயர்த்தினார்.
ஏன் , இயற்கையைக்கூட அன்பு செய்தார்...
No comments:
Post a Comment