Monday, 2 December 2013

இரயுமன்துறை புனித லூசியாள் திருவிழா

இரயுமன்துறை புனித லூசியாள் திருவிழா 

கொடியேற்று (04.12.2013, புதன்):
கருத்து: பங்கு, பங்கின் வளர்ச்சி மற்றும் இறை விசுவாசம்
எசாயா 12:1- 6('மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்...')
யோவான் 14:6-14 ('வழியும் உண்மையும் வாழ்வும் நானே... என்னை காண்பது தந்தையை காண்பது ஆகும்...)

கொடியேற்று - விழா விளம்பரம்
     -இது பிரதி வருடம் தொடர்ந்து வரும் ஒரு சடங்கு, சம்பிரதாயம்... அந்த வகையில் சாரமற்றவை, சலனமற்றவை...
- பூஜையில் பூனை கதை...
நாம் பிணங்களல்ல; செத்த மீன்களுமல்ல, மிதந்துபோக, மாறாக உயிருள்ள மீன்கள் நாம், எதிர் நீச்சல் போடவேண்டியவர்கள்... இதற்கு உணர்ச்சி தேவை, உள்ளுணர்வு தேவை... 

இது தனி மனிதனுக்கு என்பதுபோல் சமூகத்துக்கும் தேவை... அதை நாம் குழுவாக, கூட்டமாக ஓன்று சேர்ந்து அலசி ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டும்... முன்னின்று நடத்தவேண்டும், திசை திருப்பி விடவேண்டும்...

இதை செய்ய கதையளந்தால் மட்டும் போதாது,   பகற்கனவுகண்டிருந்தால் மட்டும் போதாது, ஏதாவது செய்தாகவேண்டும்- செய் அல்லது செத்துமடி என்ற உணர்வோடு.. கதை: கோழி-பருந்து...

நாம் மனிதாபிமானம் உள்ளவர்களாக வேண்டும்... சுயமரியாதை உள்ளவர்களாக வேண்டும்... பகுத்தறியும் திறன் வேண்டும்... மூட நம்பிக்கைகளில் முடங்கி கிடக்கவேண்டியவர்கள் அல்ல நாம்... 

ஏனைய சமுதாயங்கள் எவ்வளவோ முன்னேறி செல்லும்போது நாம் மட்டும் முடங்கி கிடக்கவேண்டுமா? இதனால் யாருக்கு என்ன பயன்? இல்லை எனில் ஒன்றிணைந்து செயல்படுவோம்... உயர்வடைவோம்...

இந்த பின்னணியில் ஒரு சில விஷயங்களை  உங்களுடன்  பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், நமது வளர்ச்சிக்கு பயன்படும் என்ற நம்பிக்கையில்...   

நமது பாதுகாவலி லூசியாவை பாருங்கள்... இயேசுவுக்காக, அவரது இறையரசு நற்செய்திக்காக தனது இளமையிலேயே உயிரை துறந்தவள், சித்திரவதைகளுக்கு பிறகு... 

இந்த தீவிரம் நமக்கும் இருந்தால் நிச்சயம் முன்னேற முடியும்... லூசியா நமக்கு எடுத்துக்காட்டாகட்டும், முன் மாதிரியாகட்டும்.

நமது பங்கு சிறிதாக இருந்தாலும் நிறைய விஷயங்களில் பிறருக்கு மாதிரியாக விளங்கிய பங்கு... ஆனால் இன்று நாம் ஏறக்குறைய பிளவுபட்டு நிற்கிறோம்.. யார் இதை செய்கிறார்கள், எதற்கு இப்படி செய்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்... அவர்களுக்கு இடம் கொடாமல் ஒற்றுமையாய் இருப்போம் - 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென' நிரூபிப்போம்...

இதை ஒரு மாதிரி கிராமமாக்குவோம் - போதை-புகைப்பொருட்கள் பயன்படுத்தாத, சுற்றுப்புற சுகாதாரம் உள்ள, அனைவரும் எழுத-வாசிக்கவாவது தெரிந்த, அனைவருக்கும் வீடு மற்றும் கழிப்பிட வசதியுடைய ஒரு கிராமமாக்குவோம்... 


பங்கு: இயேசுவின் சீடர்கள் 'புதிய-கிறிஸ்தவ, கடவுளின்- நெறி' (திருத்தூதர் பணிகள் 9:2; 18:26; 19:23)யினர்.
இதுவே 'மீட்பின் வழி' (16:17)என்றும் கூறப்பட்டது.

சீடர்கள் 'கிறிஸ்தவர்கள்' எனப்பட்டது 11:26 அந்தியோக்யாவில்...

திருச்சபை: மத்தேயு 16:18- பேதுரு = பாறை, பாறைமேல் திருச்சபையை கட்டுவேன்...
அ.ப 8:1- எருசலேம் திருச்சபை; 8:3 திருச்சபையை அழித்து வந்தார்...
14:23 ஒவ்வொரு திருச்சபையிலும்...
20:28 திருச்சபையை மேய்ப்பதற்கு...கண்காணிப்பாளர்களை...

சீடர்கள் சித்திரவதை படுத்தப்பட்டனர்...
தலைமறைவாகினர்... பாதாள கல்லறைகளில்...

வெளி உலகிற்கு வந்தது கான்ஸ்டன்டைன் பேரரசர் ஏற்றுகொண்டபிறகு...
தொடர்ந்து அதிகாரம், அந்தஸ்து, ஆட்சி என்றெல்லாம் கிடைக்க அரண்மனை, பேராலயம் என எல்லா வசதிகளும்... இன்றைய அமைப்புக்களின் ஆரம்பம்...
அதிகார வட்டாரங்கள் - ஆட்சி பகுதி- மறை மாவட்டம், வட்டாரம், பங்கு என...

பங்கின் வளர்ச்சி: வசதிகள் அல்ல, மாறாக அவசியங்கள் நிறைவேறும் நீதியான அமைப்புக்கள்... சமத்துவமும், சகோதரத்துவமும் நிலைநிற்கும் நிலை ... கல்வியறிவு,சுகாதாரம், தன்னிறைவுக்கு மேல் மனிதாபிமானம், பொறுப்புணர்வு, பற்றாக்குறை உள்ளவர்களை தெரிந்து உதவும் பண்பு என இயேசு வாழ்ந்ததை போன்று நன்மை செய்து வாழ்வோம், இங்கேயே இறையரசை நிஜமாக்குவோம்...

விசுவாசம்: கடவுளில் என்பதைவிட சகோதரரில்... அயலானில்...
நம்பிக்கைக்குரியவர்கள் ஆவோம்...

தந்தையோடு தம்மை இணையாய் ஒப்புவித்தவர் மனிதர்களோடும் அவ்வண்ணமே செய்தார்..

மனிதனை நம்புவது கடவுளை நம்புவதாகாதா? அவனை நம்பாமல் கடவுளை நம்ப இயலுமா?  

[நிறை வடிவம்... 03.12.2013]

No comments: