‘கருணையின்’ இந்த ‘சிறப்பு ஆண்டி’லும் இந்த புனித சஞ்சோரிசார்/ஜார்ஜியார் (இப்பெயரின் பொருள்
நிலத்தில் உழைப்பவர், உழவர் என்று.) திருத்தலத்துக்கு திருப்பயணம் வந்திருக்கும் நீங்கள் எப்போதும்போல் இறையருள் வேண்டி வந்திருக்கின்றீர்கள். அந்த அருள் உங்கள் சின்ன, சின்ன தேவைகளின் பூர்த்திகரணமாக கிடைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். உயிரினங்கள் அனைத்தின் தேவைகளையும் நிறைவு செய்யவே கடவுளின் இந்த படைப்பே... எனவேதான், இயேசு ‘ஆகாயத்துப் பறவைகளை, வயல்வெளிப் பூக்களை சுட்டிக்காட்டி கவலைவேண்டாம் என்கிறார்! [Mt 6:26,28] எனவேதான் அவர் கவலைப்பட்டதாக எங்கேயும் பார்க்க முடியாது. அப்படி அவர் கவலைப்பட்டிருப்பின், அது கடவுளின்/ தன் தந்தையின் சித்தம் அறியவே! மரண தருவாயிலும், ‘என் விருப்பப்படியல்ல, உம விருப்பப்படியே நிகழட்டும்’[Mt 26:39] என வேண்டினார்; ‘உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக’[Mt 6:10] என ஜெபிக்கவும் சொல்லித்தந்தார்...
“மண்மீதிலே எந்த ஜீவனுக்கும் அளவில்லாத ஆசைகள்/ ஒன்றல்லவே ஓராயிரத்தை தாண்டி நிற்கும் தேவைகள்/ நினைத்தது நடப்பது எவன் வசம்/ அனைத்தையும் முடிப்பது அவன் வசம்..” நாம் ஒவ்வொருவரும் எதோ ஒரு தேவை/ அவசிய காரியம் ஓன்று நிறைவேற, நம் புனிதர் இறைவனோடு நமக்காக பரிந்து பேசவேண்டும், அது நிறைவேற்றிக் கிடைக்கவேண்டும் என்றெல்லாம் எதிர்பார்த்து வந்திருக்கின்றோம். நமது தேவைகள் தெரியாதவரல்ல கடவுள். அப்படி தெரிந்துதான் அவர் ஆகாயத்துப் பறவைகளை, வயல்வெளிப் பூக்களை பராமரிக்கின்றார். பிள்ளை அப்பத்தைக்கேட்டால் கல்லை கொடுக்காத, மீன் கேட்டால் பாம்பை கொடுக்காத நாம்மைவிடவுமா கடவுள் மோசமானவர்! [Mt 7:9-10]
தற்போது வெளிவந்த பத்தாவது வகுப்பு தேர்வு பலன்களின் பின்னணியில் இதை புரிந்துகொள்ள முயல்வோம். தொண்ணூறுக்கு அதிக விழுக்காடு வெற்றி மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் மேற்படிப்பு, தொழிற்கல்வி கொடுக்க முடியுமா? அப்படி முடியாதபோது என்ன செய்வோம். இவர்களில் இன்னும் தகுதியானவர்கள் யார் என சோதிப்போம், அதாவது அதிக மார்க்கு வாங்கினவர்கள், எழுத்து மற்றும் நேர்முக தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் என ஒரு சிலருக்கே அங்கெல்லாம் படிக்கும் வாய்ப்பை கொடுப்போமல்லவா. அதேபோல, நம் அனைவருக்கும் தேவைகள் நிறையவே இருக்கும்போது, அதில் யார் தேவையை, அல்ல ஒருவரின் எந்த தேவையை பூர்த்திசெய்வது என்பதை நமக்கிருக்கும் அதிக தகுதிகளை வைத்துத்தானே. அந்த தகுதிதான் என்ன? அதுவே நமது நன்மை, நேர்மை, கருணை, நீதி, அன்பு முதலியவை... இதைத்தான் இறைஅருள் என வழக்குமுறையில் கூறுகிறோம். இதற்குத்தான் நமது புனிதர் நமக்கு வழிகாட்டி, எடுத்துக்காட்டு, மாதிரி... தன்னுயிரைக்கூட ஒரு பொருட்டாக நினையாமல் ஒரு பெண்ணை காப்பாற்ற அந்த தீய, கொடிய நாகத்திடமிருந்து மீட்டது.... இயேசுவின் வார்த்தைகளை கவனிப்போம்: ‘நண்பனுக்காக தன்னுயிரை கொடுப்பதைவிட மேலான அன்பு இல்லை.’[Jn 15:13] அந்த வகையில் அவரே உண்மை சீடர்.... அதாவது பிறர் நலம் பேணி வாழ்வதே கிறிஸ்தவ வாழ்க்கை. ‘என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னை பின்பற்றட்டும்.”[Lk 9:23] இந்த சீடன கருணை/ இரக்கமுடையவராக வேண்டுமென்றும், ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறார் [Mt 5:7; 9:13] என்றும் பார்க்கிறோம். “கருணை உன் வடிவல்லவா, கடவுள் உன் பெயரல்லவா....”
- வாழ்க்கையில்
புதுமைகள்/அற்புதங்கள் எதிர்பார்ப்பவர்கள் நாம்! நிலத்தை உழுது, வளமிட்டு,
நீர்ப்பாய்ச்சி, விதை விதைத்து/ நாற்று நட்டு, கலைபரித்து, பராமரித்து, அறுவடை
செய்தெடுக்கும் நெல்லும் கொதுமையுமொன்றும் புதுமையாக/ அற்புதமாக நாம் கணிப்பது
கிடையாது... ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் – மற்றெல்லாம்/ தொழுதுண்டு
பின்செல்வர்.’ ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.’
- ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்தல், மிச்சம் வருதல்...
-
இரவு பகல் கண்விழித்து ஆராய்ச்சி செய்து நோய் குணமாக்கும்
மருந்து போன்றவை கண்டுபிடிப்பதொன்றும் அற்புதமல்ல, புதுமையும் அல்ல ...
-
எவ்வளவு உழைத்தாலும் ஒரு வயிறுக்கு சோறு மட்டும் நமக்கு
அருகதையானது... ‘உண்பது நாழி, உடுப்பது இரண்டு, உறைவிடம் ஒன்றே...’ நாளைக்கென்று
சோறு மாற்றி வைப்பதென்பது இறைவனின் திட்டத்தில் இல்லை – எந்த ஒரு மிருகமோ, பறவையோ
அப்படி செய்வதில்லை. அதுவே ஆகாயதது பறவைகளை சுட்டிக்காட்டி நாம் பாடம் கற்க வேண்டுமென்கிறார் இயேசு...
-
‘ஆறைவிட பெரிது ஐந்து’ எனும் வைரமுத்துவின் கவிதை...
No comments:
Post a Comment