தீபம்:
இனியநல் தேவனே, இருளில் இருந்து ஒளியை தோன்ற்றசெய்த அன்பு தெய்வமே, இருள் நிறைந்த எங்கள் உள்ளத்தில் உமது ஞானம் எனும் ஒளியை ஏற்றி கடவுளின் மட்சிமையாகிய அறிவொளியை எங்கள் இதயங்களில் பிரகாசிக்க செய்து, இத்தம்பதியினரும் தீபம்போல் ஒளிபெற்று இறை மாட்சிமையில் இடம்பிடக்கவும் இத்தீபத்தை உம்திருமுன் அர்ப்பணிக்கின்றோம், ஏற்றருள்வாய் இறைவா...
மலர்கள்:
இனியநல் தேவனே, கதிரவன் தோன்றும் முன் மொட்டுக்கள் வாய் திறந்து நறுமணமெனும் வார்த்தையாலும் அழகான தன் வாழ்வாலும் இரைபீடத்தை அலங்கரித்து உம்மை போுகின்றது, மனிதனை மகிழ்விக்கின்றது. இந்த மலருக்கு இந்த மங்கை யார்மடி பிறந்தாலும், அந்த தாய் மடி மறந்து, தலைவனை சேர்ந்து நறுமனமென ஏசுவுக்கு சாட்சியாக இறை இல்லமாம் இந்த இனிய நல் ஆலயத்தில் இம்மலர்களோடு இந்த மணமக்களையும் அர்ப்பணிக்கின்றோம், ஏற்றிடுவீர் இறைவா...
திரு விவிலியம்:
ஆதியில் வாக்கு இருந்தது... அனைத்தும் அவரால் உண்டாயின... அவரிடம் வாழ்வு இருந்தது... இதை கற்றறியசெய்த வாழ்க. வாழ்வு வழங்கும் வள்ளலாம் இறைமகன் அன்பின் கட்டளைகளையும், நற்பண்புகளையும் நமக்கு உணரவைத்தது இவ்விவிலியமே. இத்தமப்தியினரும் தம் இல்லத்தில் விவிலியத்தை தீபமென ஏற்றி நாள் ஒரு அதிகாரம் வாசித்து ஆட்சியில் பங்களிக்க வேண்டி இத்திரு விவிலியத்தை அர்ப்பணிக்கின்றோம், ஏற்றிடுவீர் இறைவா...
No comments:
Post a Comment