இன்றைய ஆகாயத்தில் இரண்டு நட்சத்திரங்கள் மட்டும்! அது புவிதா-வினோத் அன்றி வேறு யாராகத்தான் இருக்கமுடியும்? இறைவனின் இதயத்திலிருந்து, எதேச்சையாக இரண்டென பிரிந்த ஒரே நட்சத்திரம்! பிரிந்த மறு பாதியை இவ்வளவு நாளும் தேடி அலைந்தும் காணாமல், பெற்றோர் உதவியுடன் கண்டுகொண்டார்கள், 'கண்டதும் காதல்'கொண்டுவிட்டார்கள்! அந்த அழகு காதல், அருமைக்காதல், கல்யாணமாகின்றது. குதூகலத்துடன் கொண்டாடுவோம், இது கடவுள் அமைத்துக்கொடுத்தது. எனவே அவர் அருளை நாடுவோம், அவரது அன்பின் சிகரமான பலியை நினைந்து, நிறைவேற்றி இவர்களுக்காக வேண்டுவோம், வாழ்நாளெல்லாம் மகழ்வுடன் வாழ, நிறைவுடன் வாழ, வாழ்வாங்கு வாழ... இந்த அரிய, அழகு சந்தர்ப்பத்துக்கு சாட்சியாக, ஆசீர்வதிக்க வந்திருக்கும் அருட்பணியாளர்களே, வாழ்த்த வந்திருக்கும் நண்பர்களே, உறவினர்களே, இது ஒரு சாதாரண சடங்காக, சம்பிரதாயமாக அல்லாமல் உயிருள்ள, உணர்ச்சியுள்ள சமர்ப்பணமாக, அன்பின் பரிமாற்றமாக மாற நாமும் அன்புடன் இதில் கலந்துகொள்வோம்.
'இடுக்கண் களைவதில்' மட்டுமல்ல இன்பம் பகிர்வதிலும் நட்பு வேண்டும், அங்ஙனமே இன்பம் பலுகும், பெருகும். எமது இந்த இன்பத்தில் பங்கேற்று புவிதா-வினோதை வாழ்த்த வந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் இதயம் நிறைந்து இனிதே வருக, வருகவென வரவேற்கின்றோம். இவர்களுக்காக செபிப்போம், இவர்களை நிறைவுடன் வாழ்த்துவோம்.
பெற்றோர்கள்:
புவிதா : லாரன்ஸ்-செல்வராணி
வினோத் : ப்ரூட்டஸ்-செல்வராணி
மண நாள் : 26.12.2012
மண மேடை: புனித லூசியாள் ஆலயம், இரயுமன்துறை
No comments:
Post a Comment