തെന്റലേ
എന്നൈ മട്ടും
വിട്ടു വിട്ടു വീസു.   
നിലവേ
പാലില് ഊറിയ ഉന് கிரணங்கள் 
என் வீட்டு வாசலில் 
விழ வேண்டாம்.
பூக்காரிகளே 
இந்த தெருவில் 
என் வீட்டை 
கழித்துவிடுங்கள் 
என் கணக்கில் 
முப்பத்தேழு கோடைகளே
முடிந்தன
என் கனவுகளில் மட்டும் 
குதிரைகளின் குளம்படிகள்
ஆனால்
எந்த ராஜகுமாரனும்
என் வீட்டு வாசலில் 
இறங்கவே இல்லை
பறக்க நினைத்து 
வான் பார்த்த என் இளமை 
இன்று 
புதைய நினைத்து 
பூமி பார்க்கிறது
கண்ணீரில் கரைந்தது 
கண்மை மட்டுமா?
இளமையும்
இளமையும் ...
கன்னத்தில் விழுந்த 
மெல்லிய பள்ளங்களில் 
என் 
கனவுகளின் சமாதிகள்
கன்னக் கதுப்பில் 
ஒரு வெள்ளிக் கம்பி
காதோடு பேசுகிறது:
"முதலில் நிற்கப் போவது
எது
மாதவிலக்கா?
உன் மூச்சா?"
எங்கிருக்கிறாய் 
என் ஷாஜஹான்?
இறந்த பின்னே
 தாஜ்மஹால் வேண்டாம்
இருக்கும்போதே 
ஒரு குடிசை கொடு
எங்கிருக்கிறாய் 
என் ராமனே?
இந்த சீதை
மணவாசம் காணுமுனே
வனவாசம் கொண்டாளே
வேண்டாம் 
ஷாஜஹானும் வேண்டாம் 
ராமனும் வேண்டாம்
நீயாவது ராவணா...
நீயாவது...
புஷ்பக விமானமா கேட்டேன் 
கள்ளத்தோணியிலாவது...  
  
எங்கள் வீட்டு
தேநீர் கோப்பையில்
எத்தனை உதடுகள்
எங்கள் வீட்டு
சிற்றுண்டி தட்டில்
எத்தனை சுவடுகள்
அவர்கள்
பலகாரம் மென்று
என்னை துப்புகையில்
நான்
அலங்காரத்தில் ஆண்டாளாய் ...
அனால்
ஆடை கொண்டும் ஏவாளாய் ... 
இப்போதெல்லாம்
எனது சுயம்வர மண்டபத்தில்
அப்பர்கள்
அப்பர்களின் அப்பன்கள்
ஆடி முடித்த 
அருணகிரிகள் 
கைத்தாங்கலாய் வரும் 
பிருதிவிராஜன்கள் 
குதிரைக்கு புல்வாங்க 
கூலி கேட்கிறார்கள் 
கழிந்து போனது 
காலம்
இனி 
மறந்து மழை பெய்தாலும் 
அது 
வேரில் வீழும் மழையா?
அன்றி 
விறகில் வீழும் மழையா?
என் 
இளமையின் வேர்களை 
கனவு தின்றது
இளமையின் கிளைகளை 
ஜாதகம் தின்றது 
இளமையின் தளிர்களை 
செவ்வாய்தோஷம் தின்று முடித்தது
இளமையின் மலர்களை 
குழப்பம் அச்சம் 
கொய்து கொண்டன
இப்போது 
கொடி வாடி நிற்கிறது
இதழ்கள் இழந்த காம்போடு 
தூண்டிலில் சிக்கவில்லை 
அனால்
 இது 
கற்புள்ள கருவாடு 
இன்று 
ஒருவனுக்கு ஒருத்தி என்றால் 
அர்த்தமுண்டா?
பெண்கள் தொகை அதிகமாச்சே 
பொருத்தமுண்டா?
சொல்லுங்கள் 
என் 
முந்தானையை மதத்தோடு 
முடிச்சிட்ட்டது யார்?
ஜாதி சிலுவையில் என்
தங்க தேகத்தை 
அறைந்து போனது யார்?
என் 
புணர்ச்சிக்கு விலைவைத்த
பொருளாதாரம் எது?
என் சூரியனை மறைக்கும் 
கிரகம்தான் யாது?
கிளர்ந்து வெளியேறுங்கள் 
கிளிகளே 
இதுவரை 
பாத்திரத்தைத்தானே 
துலக்கிவைத்தோம் 
சாத்திரத்தை...? 
Thursday, 11 November 2010
Subscribe to:
Post Comments (Atom)
 
 

No comments:
Post a Comment