அருமை அருட்சகோதரி பியோஜான்,
உங்களது அர்ப்பணிப்புக்கு நன்றி,
தீப்தி வழி வந்த நட்புக்கு நன்றி
எழுதிய மடலுக்கும் நன்றி, நன்றி...
அம்மாவை கவனிக்கவேண்டிய நீங்கள்
உங்களை இறையரசுக்கே அர்ப்பணித்தபின்
அவர்களை கவனிக்கவேண்டியது இறைவனே,
இறையரசை முழங்கிய இறைமகன் இயேசுவே...
அப்புறம் தயக்கமேன்... தைரியமாயிருங்கள்...
நாம் மறந்தாலும் அவர் மறவாதவர் - எனினும்
அவரை ஜெபத்தால் ஞாபகப்படுத்துவேன் யான்
அம்மாவுக்கு ஆரோக்கியம், உங்களுக்கு
ஆறுதல் தர...
உங்கள் அர்ப்பண வழியில் ஜெபத்தால் தொடர்வேன்
உண்மையுள்ள ஊழியத்தியாக, சீடையாக இருக்கவும்
நள்ளிரவிலும் மணமகனை எதிர்கொள்ள ஏற்றிய
விளக்குடன் விழித்திருக்கும் தோழியாகவுமிருக்க...
தீப்தி என்ன சொன்னாள்...
கடவுள் எனக்களித்த
அருங்கொடையவள்...
இப்படி ஒரு பிள்ளை
கிடைக்க யான் என்ன
தவம் செய்தேன்...
அவளது நட்பு நிஜமானது,
நிலையானது, இனிமையானது...
நீங்கள் இருவரும்
ஒருவருக்கொருவர்
நட்பை பகிர்ந்து
நாளும் இயேசுவில்
வளருங்கள்...
நித்திய வார்த்தைப்பாட்டுக்காக நித்தமும்
ஜெப-தபத்தால் தயாராகும் உங்களுக்கும்
தீப்தி உட்பட்ட எழுவருக்கும் மனமார்ந்த
வாழ்த்துக்கள்! வணக்கங்கள்!!
அன்புடன்,
பணி. பங்கிராஸ்
6th Dec 2014
No comments:
Post a Comment