தனிப்பாசம் தருவதர்க்கோர்
தங்கை வேண்டும் என்றிருந்தேன்
பிறந்துவிட்டாள் தங்கையவள்
இருபதாண்டு முன் இதேநாளில்.
சிறந்த நாள் தங்கை பிறந்த நாள்
பறந்து வந்தது அந்த விருந்தநாள்!
மயங்கவைத்தாள் மழலைபேசி
தயங்கவைத்தாள் தமிழ்பேசி
விளங்கசெய்தாள் அன்பதென
வழங்க்செய்தாள் பாசமெல்லாம்.
வளர்ந்தனள் அவள் படர்ந்தனள்
வளர்மதிபோல் வான்முல்லைபோல்
களித்தனர் கண்டுகளித்தனர்-அவள்
அழகினை அனைவரும் கண்டுகளித்தனர்.
வளர்த்துவிட்டாள் என் கர்ப்பனையை
வளமிட்டாள் என் கவிதைக்கு
தூண்டிவிட்டாள் எம் கடமைகளை
துலங்கசெய்வாள் எம் குலப்பெயரை.
1980
Friday, 25 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment