ஐம்பது வயதை அடைந்துவிட்டாய்
ஆயுளின் மறுபாதி தொடங்கிவிட்டாய்
இதுவரை காத்த இறைவனுக்கு நன்றி
இன்னும் காக்க வேண்டுவேன் உறுதி.
'இவன் தந்தை என்நோற்றான்' என்று
கேட்டனரோ இல்லையோ
இல்லை அவர் இன்று
நினைப்பாயா?
'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகன்
சான்றோன் எனக்கேட்ட தாய்
ஈன்றவளை மகிழச்செய்யும்
சான்றோன் ஆகினாயா?
உனது பெற்றோருக்கு
இன்னும் இரு பிள்ளைகள்
இருப்பது தெரியுமா?
உறவுகள் இல்லாததுபோல்
உணர்ச்சிகள் இல்லாததுபோல்
ஊமைஎன இருந்துவிட்டாய்!
வாழ்க்கை துணை தேடி
பெற்றவரை பிரியலாம்
புறக்கணிக்கலாமா?
மக்கட்பேறு பெரும்பேறே
உன்னை பொறுத்தவரை
உன் பெற்றோருக்கு?
'தான் ஆடாவிட்டாலும்
தன் சதை ஆடும்' என்பர்.
உனக்கது நிகழ்ந்ததுண்டா?
மனைவி-மக்கள் சத்தியம்
இப்போது அதுவே முக்கியம்
அடுத்தபடியாவது தாய் கூடாதா?
புகுந்த வீட்டில் போன பின்னே
பிறந்த வீடு பிடிக்கவில்லையா?
பிறர் சிரிக்கவில்லையா?
உணர்ச்சிகளை காட்டவில்லைதான்
உறவுகளை பாராட்டவில்லைதான்
இப்படி பெட்டி பாம்பாகலாமா?
பயமா? யாரை? எதற்கு?
'கோழை நூறுமுறை சாகிறான்!'
இப்படியும் ஒரு வாழ்க்கையா?
இளமை சரிகின்றது
முதுமை எழுகின்றது
புதுமை முயலலாமே?
முன்பாதியில் தவறியவை
பின்பாதியில் சரிகட்டு
நன்மாதிரி காட்டு.
பிறந்த நாள் வாழ்த்துகிறேன்
சிறந்தோங்க வேண்டுகிறேன்
நீயும் நின்குடுமபமும் nநித்தம்!
2007
Friday, 25 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment