Monday 9 August 2010

ஒரு கடிதம்...

நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்? ஏன் இந்த சிறுபிள்ளைத்தனம்? 'வாட் சால் இ டூ போர் தி 'கல்லேர்'?' எதாவது செய்ய மனதுள்ள மனிதர் நிச்சயம் இப்படி சொல்லமாட்டார். இதில் என்ன அப்படியொரு சந்தோசம்! நான் கூப்பிடவில்லை; அது வேறு விஷயம். ஏன்? கூப்பிட்டால் உலகம் இருண்டு விடுமா?
என்னில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அந்த என்னைவிட உங்களை அதிகம் நம்பினேன். என்னைவிட அதிகம் நேசித்தேன். அதற்கு பரிசாக, ஒரு ஆண் ஒரு பெண்ணை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு என்னை அவமானப்படுத்திவிட்டீர்கள் பர்சனல் வாழ்க்கையிலும், ப்ரொபெஸ்ஸிஒநல் வாழ்க்கையிலும். புரியவில்லை? சொல்கிறேன். ௧. காயத்தை காட்டினாய்; மனசை காட்டவில்லை. ௨. என்னிடம் பயம்; சந்தேகம்.' அப்படி இருக்கும்போது எப்படி உன்னால் இப்படியெல்லாம் இருக்க முடியுது? ஏன் இப்படி தரையாக இருக்கிறாய்? இந்த 'தரைக்கு' '...' யைத்தவிர இன்னொரு அர்த்தம் இருக்க முடியுமா? சொல்லுங்க. (... ஆனால் அதற்க்கு நான் வருந்தவில்லை.)
என்னிடம் கொபமேன்றோ அல்லது வருத்தமென்றோ புரிந்துகொண்ட, சமாதானப்படுத்தத்தானே முயர்ச்சித்தேன். அதற்க்கு, ௩) 'என்னை இழுக்க பார்த்தாய்; முடியவில்லை. ' ஒரு தடவையல்ல, பல தடவை அழுத்தம் திருத்தமாக பேசிய வார்த்தைகள். ... என்னை புரிந்துகொண்டவர் என்று நினைத்தேன். பரவாயில்லை.
௪) 'நீ யாரு, ஏன் என்னை கூப்பிட்டாய்? என்னை என் பாட்டுக்கு விடு' இவ்வளவு தூரம் பேசக்கூடிய அளவுக்கு நான் இருந்ததை நினைத்தால் கேவலமாகத்தானிருக்கிறது. இன்னும் உண்டு புகழ் மாலைகள். எழுத நேரமுமில்லை; சூழலும் இல்லை.
அன்பு காட்டும்போது மசிமும். அதே ஆளை வெறுக்கும்போதும் மசிமும். விலங்கும் தான் அன்பு செய்கிறது. ஆனால் எந்த உறைவிடம் என்ன, எப்படி பேசவேண்டும் என்று மனிதனுக்கு மட்டும் தான் தெரியும். பரவாயில்லை. அனைத்தையும் அன்புக்கு கிடைத்த 'ஆஸ்கார் அவர்ட்' ஆக எடுத்துக்கொள்கிறேன். என் உரிமைகளை நான் எப்பவோ இழந்துவிட்டதாக சொன்னீர்கள். இழக்கவும் கொடுக்கவும் எடுக்கவும் இது 'கண்டிஷன் பேஸ் ல் வந்ததல்ல. அன்பில் உருவான பந்தம். எதோ உரிமையில் ..., ... இவற்றை என்னோடு வைத்துகொள்கிறேன். நல்லாயிருங்க. ஜெபிக்கிறேன். (௨-௮- ௨0௧0)

No comments: