Friday 20 March 2009

மோளி - சாலோ திருமகள்...


பூமணம் கொண்ட மோளி

பால் மணம் கொண்டாய்

பொங்கிடும் தாய்மையில்

தங்க சேயினை ஈன்றாய் வாழி!


தாய்மை மோளிக்களித்த சாலோ

தகைசான்ற தந்தையானாய்

வானத்து தாரகத்தை நீயும்

வையகத்தே தந்தாய் வாழ்க!


மோளியின் மோகன ராகமிவள்

சாலோவின் சப்தஸ்வரமிவள்

சங்கீதம்போல் இவள் வளர்க

சந்தோசம் அனைவருக்கும் தருக.


மேரிபதியாம் சூசையப்பர் பெருவிழா

தவக்காலத்து விதிவிலக்கு திருவிழா

இவ்வரிய மார்ச் பத்தொன்பதாம் நாள்

இகம் வந்து இன்பம் தந்த திருமகள்!


பங்குனி மாத பாவை இவள்

ஆறாம் தேதி அழகு இவள்

பார் போற்ற சிறக்க

பரமன் உனை காக்க!

- பங்கி



Monday 9 March 2009

ரோஜி-ப்ரெடி-> ராஜகுமாரி!


திங்கள் முகமெடுத்து

செவ்வாய் இதழெடுத்து

பிள்ளை மலர் சிரிப்போடு

ரோஜி-ப்ரெடியின்

ராஜகுமாரி பிறந்தாள்!


முழுமதிக்கு முந்தின நாள்

முழுமதியாக பிறந்தவள்!

வசந்தம் வருமுன்

வசந்தமாக வந்தவள்!


இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு

மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி

[மாசி மதம் இருபத்தி ஐந்தாம் தேதி]

திங்கள் கிழமை

மலரும் வேளை

[குறிப்பாக நள்ளிரவுக்கு பின்

இருபதாம் நிமிடத்தில்]

திங்களாக மலர்ந்தவள்!


நீ வாழ்க, வளர்க,

வையகம் போற்ற

சிறக்க...


உன் பெற்றோருக்கு

பெருமையாக...

மற்றவருக்கும்

மாதிரியாக...

கடவுளின் கருணையாக

நீ வளர்க...


உன்னை வாழ்த்தி வேண்டும்,

உன் பெற்றோரின் நண்பன்