Tuesday 2 November 2010

கற்பும் கருப்பையும்...

கருப்பை இல்லாத கற்பு
கற்பனையோ, காரியமோ?
'ஒருவளை கெட்ட எண்ணத்தோடு
பார்த்தாலே அது பாவம்' எனும்போது
கற்பு எண்ணத்திலா, செயலிலா?
எண்ணத்தால் கற்பு கலைந்துவிட்டால்
பின் கற்பழிப்பை என்னென்பது?
கருப்பை இல்லாதவர்களும்
கற்பை பற்றி பேசலாமா?
கற்பு, தூய்மை, உண்மை, நன்மை
என எல்லாமே ஒன்றல்லவா?
'வாய்மை எனப்படுவது யாதெனில் -யாதொன்றும்
தீமை இலாது செயல்.' என்பது சரியெனில்
தீமையிலாததெல்லாம் சரிதானே?
எண்ணங்கள் சோதனை எனலாம்.
சோதனைக்கு உட்பட்டால்
வேதனைதரும் செயல் பிறக்கும்
செயல் தொடர்ந்தால் பழக்கமாகும்
பழக்கம் பின் பாவ வாழ்க்கையாகும்!
எதற்கு இந்த சிந்தனை?
எதற்கு இப்படி எழுதி
தொலைக்கவேண்டும்?
எங்கோ சில குற்ற உணர்வுகள்
இருந்து தொல்லை தருகின்றதோ?
இப்படி எழுதினால் குற்றவுணர்வுகள்
குறைந்துபோகுமோ, இல்லை
தொலைந்துபோகுமோ?
இந்த எழுத்தே ஒரு கண்ணாடியாமோ?
மனதின் ஆழங்களை வெளிக்கொணருமோ?
மனம் வெளிப்படும்போது,
வெளிப்படையாகும்போது,
சுத்தமாகும், சுகமாகும்.
இது போதும், இப்போது.
இன்னும் தொடருவேன் தப்பாது.

No comments: