Tuesday 27 November 2012

வழக்குரைஞர்கள் தினம்

வழக்குரைஞர்கள் தினம் [கோட்டார் புனித சவேரியார் திருவிழா 28.12.2012]

திருமுழுக்கு நம்பிக்கை/நீதி வாழ்வுக்கு அறிமுகம்:

இயேசு திருமுழுக்கு பெற்றது அவரது பொது வாழ்க்கையின் ஆரம்பமாக, அறிமுகமாக. இதை அவர் வெறும் ஒரு சாதாராண சடங்காகக அல்லாமல் தனது வாழ்க்கையை பிரகடனப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாகவே மாற்றினார். 

இதனால்தான் என்னமோ 'உன்னத'த்திலிருந்து, "இவர் எனக்கு ஏற்புடையவர், பிரியமானவர்" என்ற முழக்கம் கேட்டது. இதுவே பாலையில் சோதிக்கப்பட்டு, நாசரேத்து தொழுகைக்கூடத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது. 

இறைவனும் இறையரசும் நீதி சார்ந்தது என்பது விவிலிய கோட்பாடு. அதற்கு உத்தரவாதம் தர சட்டங்கள் தரப்பட்டன. விடுதலைப்பயண நூலில் தொடங்கி லேவியராகமம் மற்றும் இறை வாக்கினர்களினூடே இது உறுதிப்படுத்தப்பட்டது. 

மனித பிரயாணத்தில் நாகரீகம் தோன்ற மற்ற எதையும்விட சட்டங்கள் நிர்ணாயக உதவி புரிந்தது. மனித உரிமைகள் மதிக்கப்பட, சமத்துவம் போற்றப்பட, நீதி நிலைநாட்டப்பட சட்டங்கள் அவசியமாகியது. 

இயேசு காலத்து சட்ட வல்லுனர்கள் முற்போக்கு வாதிகளாக அல்லாமல் சட்டத்துக்கு அடிமைகளாகி இறை மக்களுக்குரிய சுதந்திரத்தையே பறிகொடுத்தவர்கள்! இயேசு திருச்சட்டத்தை... அழிக்கவல்ல, நிறைவேற்ற வந்தவர். "ஓய்வுநாள் (சட்டம்) மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வுநாளுக்காக" அல்ல. இந்த அணுகுமுறையே நம்மை சுதந்திரத்துக்கு இட்டு செல்லும், விடுதலை அளிக்கும். 

நீதி நடத்த நமது அமைப்புக்கள் சட்டத்தை பெரிதும் சார்ந்திருக்கின்றது, அதனாலேயே சட்ட வல்லுனர்களையும், வழக்குரைஞர்களையும்.... அந்த அடிப்படையில்தான் இந்நாள் முக்கியத்துவம் அடைகின்றது. 

ஏழை எளியோருக்கு நீதிக்கு உத்தரவாதம் வேண்டும். அனாதைகள், கைம்பெண்கள், அன்னியர்கள் ஆகிய அனைவருக்கும் நீதி வேண்டும். நாம் அதற்க்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும். 

"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து..." இது நம்பிக்கையின்மையின், அறியாமையின் விளைவு. அறிவு ஆணவம் தரும், சரியான பொருளில். ஆணவம் இல்லாது ஆளுமை ஏது! 

சட்டத்தை விடுதலைக்கு வித்தாக்குவோம். 

No comments: