Wednesday 11 February 2009

புது உறவு தந்த இன்ப சுற்றுலா [தொடர்ச்சி ௫]

நிலவை இருள் என்ற அரக்கன் வெளியே வராமல் அடக்கி வைத்துக் கொண்டிருந்தான். முட்டத்தின் முத்தான இயற்க்கை காட்சியை அந்த இருளிலும் காண முடிந்தது. கடற்கரையில் பல விதமாக காட்சியளித்த பாறைகள் ஒவ்வொரு பாறையையும் பாரபட்சமின்றி காதலித்தது அந்த கடல். பாறை மீது நடந்தோம். கடலில் சென்றிருப்பவர்களுக்கு பாதுகாப்பாக மிக உயர்ந்த விளக்குத் தூண் ஒவ்வொரு நிமிடமும் மெதுவாக வட்டமடித்துக் கொண்டிருந்தது. மழைவில்லை பார்ப்பது போன்று இருந்தது அதன் நிறம். மனற்பரப்பான ஒரு இடத்தில் அனைவரும் அமர்ந்தோம். புறப்படும் நேரத்திலிருந்து அதுவரை அனுபவித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டோம். பின் எழுந்து நடந்தோம். ஒரு விருந்தினர் வீட்டில் அழைத்திருந்ததால் அங்கு சென்றோம். வந்தாரை வாழவைக்கும் தமிழ் மரபில் பிறந்தவர்களல்லவா. அந்த இருளில் பேரூந்திர்க்காக காத்திருந்த சில பெண்களை எங்களுடன் ஏற்றி அனுப்பிவிட்டு அண்ணனும் சில நண்பர்களும் நடந்து வந்துகொண்டிருந்தார்கள். நாங்கள் அந்த வீட்டுப்பகுதியை அடைந்தோம். நம் ஊரிலுள்ளதுபோன்று பக்கத்து பக்கத்தில் வீடுகள் இல்லை. அவர்களின் நிலங்களில் வீடு வைத்திருந்தார்கள். ஏதாவது ஆபத்து வந்தால் நம் ஊரிலுள்ளதுபோன்று வெகு சீக்கிரம் அவர்களுக்கு உதவ முடியாது. இதை நினைத்ததும் நம் ஊரைப் பற்றிய ஒரு நன்மதிப்பு வந்தது. விருந்தினரை உபசரிக்கும் விதத்தை அவர்களும் அறிந்திருந்தார்கள். பின் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு வாகனத்தில் ஏறினோம். ஊருக்கு செல்கிறோம் என்று கூறியதும் அனைவருக்கும் சிறிது கவலை. உல்லாசப் பயணம் முடிந்துவிட்டதை நினைத்து வருந்தினோம். இருந்தபோதும் உற்சாகமுடன் பாடினோம். கடைசியாக தேசியகீதத்துடன் ஊர் வந்து சேர்ந்தோம்.
[அந்த இன்ப சுற்றுலா அனைவரின் உள்ளங்களிலும் அழியா முத்திரையை பதித்துவிட்டது. அன்பு இறைவன் எனகென்று ஒரு புது உறவை எதிர்பாராதவிதமாக ஏற்படுத்தினார். இறைவன் தந்த உறவு என்றைக்கும் அழியாது. எந்த காட்டாற்று வெள்ளமும் அடித்துக்கொண்டு செல்லாது. அண்ணாவிற்கு இதயத்தில் ஓரிடம் கொடுத்ததை எந்த சூழ்நிலையிலும் திருப்பிக் கொடுக்கமாட்டேன். உறவை ஏற்படுத்திய அந்த இறைவன் அதை நிரந்தரமாக பாதுகாக்கவும் உதவி செய்வார். அன்பு என்ற மூன்றெழுத்து பூத்து மனம் வீச துவங்கியது.]
[கையொப்பம் ஜாக்குலின் ௧௯.௧௧.௯௧]

No comments: